sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நெல் கொள்முதல் மையம்; கோட்டூரில் துவக்கம் 

/

 நெல் கொள்முதல் மையம்; கோட்டூரில் துவக்கம் 

 நெல் கொள்முதல் மையம்; கோட்டூரில் துவக்கம் 

 நெல் கொள்முதல் மையம்; கோட்டூரில் துவக்கம் 


ADDED : மார் 11, 2026 06:40 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆனைமலை அருகே, கோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையம் நேற்று துவங்கப்பட்டது.

ஆனைமலை அருகே, ஆழியாறு அணை வாயிலாக, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இரு பருவங்களாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால், இரு பருவத்திலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த நவ., மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையையேற்று, கோட்டூர் மலையாண்டிப்பட்டிணத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன், செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. சன்னரகம் ஒரு குவிண்டாலுக்கு, 2,545 ரூபாய்; பொதுரகம் ஒரு குவிண்டால், 2,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலை, 9:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரையும், மாலை, 2:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 17 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். விவசாயிகள், கொள்முதல் மையத்துக்கு நெல்லை கொண்டு வந்து பயன்பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us