/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரிகள் கெடுபிடியால் அதிருப்தி! சிறு வியாபாரிகள் அவஸ்தை
/
அதிகாரிகள் கெடுபிடியால் அதிருப்தி! சிறு வியாபாரிகள் அவஸ்தை
அதிகாரிகள் கெடுபிடியால் அதிருப்தி! சிறு வியாபாரிகள் அவஸ்தை
அதிகாரிகள் கெடுபிடியால் அதிருப்தி! சிறு வியாபாரிகள் அவஸ்தை
ADDED : ஏப் 12, 2024 12:36 AM
கோவை:கோவையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளை சேர்ந்த அதிகாரிகள், தினமும் வாகன சோதனை நடத்தி, பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், ஒரு தனி நபர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கே சோதனை செய்து, பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், இதுவரை, ஒரு ரூபாய் கூட எந்தவொரு அரசியல்வாதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்படவில்லை. வர்த்தகத்துக்காக பணம் எடுத்துச் செல்வோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. இது, வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்ட தலைவர் இருதய ராஜா: சிறு வியாபாரிகள் ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு சென்று மளிகை பொருட்கள், ஆயில், காய்கறி, அரிசி என வாங்குவர். இதற்கு, 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். பணத்தை தொழிலுக்கு கொண்டு செல்கிறார்களா; தேர்தல் பயன்பாட்டுக்கு கொண்டு செல்கிறார்களா என அதிகாரிகள் முடிவு செய்யலாம். வியாபாரிகள் இரண்டு லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
கோவை மார்க்கெட் வியாபாரிகள் சங்க (டி.கே.மார்க்கெட்) தலைவர் கணேசன்:
கிராமங்களில் உள்ள சிறு வியாபாரிகள், வாரம் ஒருமுறை மார்க்கெட்டுக்கு வந்து, மொத்த வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கிச் செல்வர். அவர்களால் பணம் எடுத்துக் கொண்டு வர முடியவில்லை. இதனால், வியாபாராம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகர் மாவட்ட மலர் வியாபாரிகள் நலச்சங்க துணை தலைவர் கோட்டை ஹக்கீம்: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால், பூ வியாபாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. பணம் எடுத்து செல்ல முடியாமல் சிரமமாக இருக்கிறது. பயந்து பயந்து செல்ல வேண்டியிருக்கிறது.

