/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
ADDED : அக் 09, 2024 10:12 PM
கிணத்துக்கடவு : தமிழகம் முழுதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், அரசு சார்பில் பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சைக்கிள் வழங்கும் விழாவில், எம்.பி., ஈஸ்வரசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பிளஸ் 1 படிக்கும் 85 மாணவர்கள், 121 மாணவியர் என, மொத்தம் 206 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
விழாவில் எம்.பி., பேசுகையில், ''தனியார் பள்ளியை விட, தற்போது அரசு பள்ளி நன்கு முன்னேறியுள்ளது. தமிழக அரசு கல்விக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இலவச பஸ் பாஸ், கல்வி ஊக்கத்தொகை, மடிக்கணினி, சைக்கிள், சீருடடை போன்றவைகள் அரசு வழங்குகிறது. இவற்றை மாணவர்கள் பயன்படுத்தி, அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும்,'' என்றார்.