/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிஎன் ஸ்பார்க்' குறித்த புத்தகங்கள் விநியோகம்
/
'டிஎன் ஸ்பார்க்' குறித்த புத்தகங்கள் விநியோகம்
ADDED : ஆக 16, 2025 11:24 PM
கோவை; கோவை வருவாய் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளுக்கு, டிஎன் ஸ்பார்க் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹைடெக் லேப்களில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியை வழங்கும் நோக்கில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் டிஎன் ஸ்பார்க் எனும், கணினி பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. தற்போது 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கே புத்தகங்கள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு ஹைடெக் லேப்களில் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 84 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்கான புத்தக விநியோகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடிப்படை கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்களை கற்பிக்க, தேவையான புத்தகங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.