/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வினியோகம்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வினியோகம்
ADDED : ஆக 26, 2025 10:23 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, பேனா மற்றும் விளையாட்டு உபகரணங்கள், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, சல்டானா ரோட்டில் நடந்தது.
பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர் கருணாநிதி வரவேற்றார். நகராட்சி தலைவர் சியாமளா, விழாவை துவக்கி வைத்த போது, 'மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றார்.
நகராட்சி கமிஷனர் கணேசன், நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். மொத்தம், 93 பள்ளிகளை சேர்ந்த, 780 மாணவர்களுக்கு பேனா, நோட்டு போன்ற கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.