/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எல்.ஏ., பிறந்தநாளில் அன்னதானம் வழங்கல்
/
எம்.எல்.ஏ., பிறந்தநாளில் அன்னதானம் வழங்கல்
ADDED : ஜூலை 03, 2025 09:27 PM

பொள்ளாச்சி; எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனின், 72வது பிறந்த நாள் விழாவையொட்டி திப்பம்பட்டி வீரதங்க பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஏழை மக்களுக்கு அன்னதானம் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நல பெட்டகம் வழங்கப்பட்டது.
மரப்பேட்டை பள்ளி அருகே முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு, கோதவாடி, ஐயம்பாளையம் பகுதிகளில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், பாபு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் அக்னீஸ் முகுந்தன், பிரவீன் பங்கேற்றனர்.