/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய் சேய் நல திட்டத்தில் சத்தான உணவு விநியோகம்
/
தாய் சேய் நல திட்டத்தில் சத்தான உணவு விநியோகம்
ADDED : ஆக 05, 2025 11:20 PM
அன்னுார்; தாய் சேய் நலத்திட்டத்தில் 50வது வாரமாக சத்தான உணவு வழங்கப்பட்டது.
தாய் சேய் நலத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அன்னுார் அரசு மருத்துவமனை மற்றும் பொகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 50வது வாரமாக உணவு வழங்கப்பட்டது.
மேலும், நேற்று முதல் மூக்கனுாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. இனி தொடர்ந்து மூன்று மருத்துவமனைகளிலும் வாரந்தோறும் செவ்வாயன்று சத்தான உணவு வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் ரோட்டரி சங்க தலைவர் மனோகரன், செயலாளரின் விஷ்ணு, பொருளாளர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.