/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை துறையில் பனை விதை விநியோகம்
/
தோட்டக்கலை துறையில் பனை விதை விநியோகம்
ADDED : செப் 05, 2025 09:44 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தோட்டக்கலை துறை சார்பில் பனை விதைகள் பயனாளிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.
பனையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இதர கைவினைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பனை மேம்பாட்டு இயக்கம் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் பனை விதைகள் விநியோகிக்கப்படுகிறது.
இதில், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், பயனாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு பனை விதைகள், 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்காக, 5 ஆயிரம் பனை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில், தனி நபர் மற்றும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 50 விதைகளும், ஊராட்சி அலுவலகம் அல்லது தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, பனை விதைகள் நடவு செய்வதற்கு அதிகபட்சமாக, 100 விதைகளும் வழங்கப்படும்.
பனை விதைகள் தேவைப்படும் நபர்கள், ஆதார் கார்டு நகலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், இத்திட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.