/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி செடிகள் வழங்கல்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி செடிகள் வழங்கல்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி செடிகள் வழங்கல்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி செடிகள் வழங்கல்
ADDED : அக் 03, 2024 11:54 PM

பொள்ளாச்சி : ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வாயிலாக, ஆண்டுதோறும் செப்., 1 முதல், 30 வரை, அனைத்து வட்டாரங்களிலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஆனைமலையில், 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளையுடன் இணைந்து, வட்டார அளவிலான ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா தலைமை வகித்தார். தொடர்ந்து, ஒரு கிராமத்தின் ஆரோக்கியத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் இடையே ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, காய்கறி தோட்டம் அமைக்க செடிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.