/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி விதை தொகுப்பு; மக்களுக்கு வினியோகம்
/
காய்கறி விதை தொகுப்பு; மக்களுக்கு வினியோகம்
ADDED : ஜூலை 17, 2025 09:37 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தில், காய்கறி விதை தொகுப்பு வினியோகிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் வாயிலாக, காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
பொது பிரிவினருக்கு, 3,480 தொகுப்பும், எஸ்.சி., பிரிவிற்கு 770 தொகுப்புகள் என மொத்தம், 4,250 காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இதில், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், கொத்து அவரை மற்றும் கீரை வகைகள் என, ஆறு வகையான விதைகள் வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பெற்றுச் செல்கின்றனர்.
மேலும், காய்கறி விதை தொகுப்பினை வாங்கி செல்லும் மக்களுக்கு, விதைப்பு முதல் அறுவடை வரை என்ன செய்வது, பயிர் பாதுகாப்பு சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் இந்த தொகுப்பினை, ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுத்து 100 சதவீதம் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதெரிவித்தார்.