/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவைகளின் தாகம் தீர்க்க நீர்த்தொட்டி வினியோகம்
/
பறவைகளின் தாகம் தீர்க்க நீர்த்தொட்டி வினியோகம்
ADDED : ஏப் 14, 2025 11:06 PM
கோவை; கோடையில், பறவைகளின் தாகத்தை தணிக்கும் விதமாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு தண்ணீர் தொட்டிகள் வழங்கப்படும் என, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சிராஜுதீன் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைக்காலம். கோடையில் பறவைகளின் தாகம் தணிக்க, தண்ணீர் தொட்டிகளை வைக்கும் வகையில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். தொடர்ந்து நீர் தொட்டியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தானியங்கள் வைக்க வேண்டும். பறவைகள் நீர் அருந்துவதை புகைப்படம் எடுத்து அனுப்பினால், அதற்கு பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கிறோம்.
குழந்தைகள் பொழுதுபோக்காக இதை ஆரம்பித்தாலும், பறவைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும்போது, அவர்களுக்கு பறவைகளின் மீது இணக்கம், பற்று ஏற்படும். இயற்கையைப் பற்றிய புரிதலும் உருவாகும்.
கடந்த ஆண்டு, 430 குழந்தைகளுக்கு இந்த நீர் தொட்டியை வழங்கினோம். சிறார் பூங்காக்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடி அழைத்தாலும், அங்கு சென்று இலவசமாக வழங்கி, பறவைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தொடர்புக்கு: 97900 51666.