/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
ADDED : மே 13, 2025 01:21 AM
கோவை, ; தென்மேற்கு பருவ மழைக்கு முன், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கோவை மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழை சராசரியாக, 884.99 மி.மீ., வடகிழக்கு பருவ மழை 487.32 மி.மீ., பதிவாகும்.
சப்-கலெக்டர், கோட்டாட்சியர்கள், தாசில்தார் அலுவலகங்களில், வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் ஊழியர்களுடன் செயல்பட வேண்டும்; அதற்கேற்ப சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
டோல் ப்ரீ' எண் 1077
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, 1077 என்ற 'டோல் ப்ரீ' எண்ணுக்கு பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, தெரிவிக்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க, திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவு கூடங்களை தேர்வு செய்து, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, தனித்தனி குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
முதல் தகவல் அளிப்பவர்கள், மீட்பு அலுவலர்களுக்கென குழுக்கள் அமைத்து கோட்ட அளவில் கூட்டம் நடத்த வேண்டும்.
கால்வாய்களை துார்வாரணும்
வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், அந்தந்த கிராமங்களில் தங்கியிருந்து, வெள்ளம் மற்றும் இதர சேதம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
நீர் நிலைகளில் நீர் மட்டத்தை உன்னிப்பாக கவனிப்பது அவசியம். நீர் வழி புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆறுகள், நீர்ப்பாசன கால்வாய்களை துார்வாரி, ஆக்கிரமிப்பு இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை வசமுள்ள நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரிகளில் எச் சரிக்கை பலகை
சாலையில் சாய்ந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற, மரம் வெட்டும் இயந்திரங்கள், பணியாட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு குட்டைகள் அமைத்து, மழை நீரை சேமிக்க, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் ஆதாரங்களில் முறையாக குளோரின் கலக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கனிம வளத்துறை பயன்பாட்டில் உள்ள குவாரிகளில் மழை நீர் தேங்கும்; அக்குவாரிகளுக்கு வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகுமா என கண்டறிந்து, உணவுப் பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.