/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துவங்கியது மாவட்ட கலைத்திருவிழா 1,100 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
துவங்கியது மாவட்ட கலைத்திருவிழா 1,100 மாணவ, மாணவியர் பங்கேற்பு
துவங்கியது மாவட்ட கலைத்திருவிழா 1,100 மாணவ, மாணவியர் பங்கேற்பு
துவங்கியது மாவட்ட கலைத்திருவிழா 1,100 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : அக் 27, 2025 11:53 PM

கோவை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி சாரா தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், 2025--2026 கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, கோவையில் நேற்று தொடங்கியது.
பள்ளி மற்றும் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெறும் இவ்விழா, அக்.30ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, விழாவை தொடங்கி வைத்தார்.
1,100 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். களிமண், மணல் சிற்பம், ரங்கோலி, தனி நபர் நடனம், குழு நடனம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இவர்களில், முதலிடம் பெற்ற மாணவர்கள், சேலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தொடக்க விழாவில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா, மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

