/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட பூப்பந்து; எஸ்.என்.எஸ்., அசத்தல்
/
மாவட்ட பூப்பந்து; எஸ்.என்.எஸ்., அசத்தல்
ADDED : பிப் 12, 2024 11:59 PM

கோவை;எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் நான்காம் ஆண்டு 'எஸ்.என்.எஸ்., அலும்னி கோப்பைக்கான' பூப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
மாணவர் பிரிவினருக்கான பூப்பந்து இறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., முன்னாள் மாணவர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வீழ்த்தியது. மாணவியர் பிரிவு இறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., முன்னாள் மாணவர்கள் அணியை வீழ்த்தியது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 2-1 என்ற செட் கணக்கில், கே.பி.ஆர்., அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பை, பதக்கம் பரிசாக வழங்கப்பட்டன.