/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து ஆக்ரோஷமான ஆட்டம்
/
மாவட்ட கூடைப்பந்து ஆக்ரோஷமான ஆட்டம்
ADDED : ஜூன் 20, 2025 12:42 AM

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், வீரர், வீராங்கனைகளின் அபார ஆட்டம் ரசிகர்களிடம் வெற்றி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
மாவட்ட அளவிலான நான்காம் ஆண்டு, 'ஸ்ரீ நவகோடி நினைவுக் கோப்பை' கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது; வரும், 22ம் தேதி நிறைவடைகிறது.
இரண்டாம் நாளான நேற்று வீரர், வீராங்கனைகளின் ஆக்ரோஷமான ஆட்டம், ரசிகர்களின் கரகோஷத்தை கூட்டியது. 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், டெக்சிட்டி அணியும், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., 'பி' அணியும் மோதின.
பரபரப்பான ஆட்டத்தில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., 'பி' அணி, 71-27 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஸ்பைஸ் அணி, 46-32 என்ற புள்ளிகளில் பேஷன் அணியை வென்றது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், யங் பிளட் அணி, 71-13 என்ற புள்ளிகளில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்., 'பி' அணியை வென்றது.
பீப்பல் அணி, 36-25 என்ற புள்ளிகளில் பேஷன் பொள்ளாச்சி அணியை வென்றது. 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், பிளெசிங் ஸ்டார் அணி, 52-19 என்ற புள்ளிகளில் ஆர்.எஸ்.சி., அணியை வெற்றிகொண்டது.
அல்வெர்னியா அணி, 63-27 என்ற புள்ளிகளில் யுனைடெட் அணியையும், பாரதி அணி, 61-23 என்ற புள்ளிகளில் ஒய்.எம்.சி.ஏ., அணியையும், பி.எஸ்.ஜி., சர்வஜனா அணி, 44-5 என்ற புள்ளிகளில் யுனைடெட் அணியையும் வென்றது.
தவிர, 13 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் ஆர்.எஸ்.சி., அணி, 26-19 என்ற புள்ளிகளில் லிசிக்ஸ் அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.