/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி: ஜெயபாரதி கிளப் சாம்பியன்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி: ஜெயபாரதி கிளப் சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி: ஜெயபாரதி கிளப் சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி: ஜெயபாரதி கிளப் சாம்பியன்
ADDED : ஜன 14, 2024 11:56 PM

கோவை:டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில், '17வது ஸ்ரீ தேவராஜூலு நினைவு கோப்பை'க்கான, ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு, 'கோட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கோப்பை' போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க மைதானத்தில் நடந்தன.
இதன் ஆண்கள் பிரிவில் 25 அணிகள், மாணவர் பிரிவில் 12 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்று, 'நாக் அவுட்' முறையில் போட்டியிட்டன.
இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், ஜெயபாரதி கூடைப்பந்து கிளப் மற்றும் சிக்சர்ஸ் கூடைப்பந்து கிளப் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில், ஜெயபாரதி அணி 69 - 63 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில், அன்னுார் கூடைப்பந்து கிளப் அணி 64 - 53 என்ற புள்ளிக்கணக்கில், வெஸ்ட் ஜோன் அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற அணியினருக்கு, ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டன. டெக்சிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோவிந்தராஜன் மற்றும் முன்னாள் கூடைப்பந்து வீரர் ஆனந்தன் ஆகியோர், பரிசுகளை வழங்கினர்.