/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் லீக் ;விஜய் சி.சி., வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் லீக் ;விஜய் சி.சி., வெற்றி
ADDED : ஜன 09, 2024 12:26 AM
கோவை;மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்த, 'யூனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்' கோப்பைக்கான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் விஜய் சி.சி., மற்றும் ரெட் டைமண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ரெட் டைமண்ட்ஸ் அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர். அணிக்காக, நிவாஸ் (41), சிவக்குமார் (35), அருண் (33), அரவிந்த் (37) ஆகியோர் பொறுப்பாக விளையாட, அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது.
விஜய் அணியின் சரவணகுமார், சாமிநாதன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து விஜய் சி.சி., அணியினர் 34 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து 190 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தனர். அணிக்காக நவீன் குமார் (67*), சரவணகுமார் (46*) ஆகியோர் அசத்தலாக விளையாடினர்.