/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி; கிருஷ்ணா டெக்., முதலிடம்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி; கிருஷ்ணா டெக்., முதலிடம்
மாவட்ட கிரிக்கெட் போட்டி; கிருஷ்ணா டெக்., முதலிடம்
மாவட்ட கிரிக்கெட் போட்டி; கிருஷ்ணா டெக்., முதலிடம்
ADDED : ஜன 30, 2024 12:07 AM
கோவை;கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், ஆர்.வி.எஸ்., அணியை வீழ்த்தி கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி, முதலிடம் பிடித்தது.
ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்துார் டெக்சிட்டி சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் பத்து கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப்போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் ஆர்.வி.எஸ்., அலுமினி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்.வி.எஸ்., அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய கிருஷ்ணா அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்ற, அணியின் தர்சித் (75*) அபாரமாக விளையாடி, அணியின் வெற்றிக்கு உதவினார்.
கிருஷ்ணா கல்லுாரி அணி 18.1 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, கிருஷ்ணா கல்லுாரி முதல்வர் சுமித்ரா, உடற்கல்வி இயக்குனர் மாரிசெல்வம் உள்ளிட்டோர் பாராட்டினர்.