ADDED : மார் 09, 2026 06:11 AM
அன்னூர்: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், கருமத்தம்பட்டி அணி கோப்பையை வென்றது.
அன்னூர் அருகே பட்டக்காரன் புதூரில், ஸ்கார்பியன் ரெணி கேட்ஸ் கிரிக்கெட் அணி சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது.
இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் 12 ஓவர்கள் என்னும் அடிப்படையில்போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் கருமத்தம்பட்டி டி.சி.சி. அணி முதல் பரிசு மற்றும் கோப்பையை வென்றது.
நம்பியூர் ஆர்.சி.சி., அணி, இரண்டாம் இடத்தையும், ஸ்பார்ட்டன் சி.சி., அணி மூன்றாம் இடத்தையும், பவானிசாகர் வாரியர்ஸ் அணி நான்காம் இடத்தையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, ரொக்க பரிசு, கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்கள், பட்டக்காரன்புதூர் ஸ்கார்பியன் ரெணிகேட்ஸ் அணி சார்பில் வழங்கப்பட்டது.
