/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டார வளர்ச்சிஅலுவலர் பொறுப்பேற்பு
/
வட்டார வளர்ச்சிஅலுவலர் பொறுப்பேற்பு
ADDED : பிப் 12, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்:சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணிபுரிந்து வந்த ஜெயக்குமார், சர்க்கார் சாமக்குளத்திற்கு மாற்றப்பட்டார்.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய அலுவலகத்தில், நேற்று வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ஜெயக்குமார் பொறுப்பேற்றார். அவருக்கு, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், அலுவலர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.