/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
/
அரசு பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
ADDED : ஆக 12, 2025 09:03 PM
மேட்டுப்பாளையம்; காரமடை வட்டார கல்வி அலுவலர், மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
காரமடை வட்டார கல்வி அலுவலராக தமிழ்ச்செல்வி பணியாற்றி வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, பல்வேறு துவக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், ஆசிரியர்களிடமும், புதிதாக மாணவர்கள் சேர்ந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். பள்ளிக்கு வராமல் ஏதேனும் குழந்தைகள் இருந்தால், அவர்களை உடனடியாக பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார்.
மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில், ஆறு வடநாட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. அதேபோன்று ராமசாமி நகரிலும் ஒரு மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது, தெரிய வந்தது.
இந்த ஆறு மாணவர்களை சி.எஸ்.ஐ., நடுநிலை பள்ளியிலும், ராமசாமி நகர் பகுதி மாணவனை, மேட்டுப்பாளையம் நகராட்சி அண்ணா நகர் துவக்க பள்ளியிலும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.