/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்; 15 நிர்வாகிகள் தேர்வு
/
மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்; 15 நிர்வாகிகள் தேர்வு
மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்; 15 நிர்வாகிகள் தேர்வு
மாவட்ட கால்பந்து சங்க தேர்தல்; 15 நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 26, 2025 05:28 AM

கோவை; கோவை மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர், உதவி தலைவர்கள், செயலாளர் உட்பட, 15 பேர் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், காந்திபுரத்தில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. இதில், 2025-28ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் அதிகாரியான, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜ் முன்னிலையில் நடந்த தேர்தலில், சங்க உறுப்பினர்கள், 24 பேர் வாக்களித்தனர்.
அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தேர்தலின் முடிவில், மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில், உதவி தலைவர்களாக ராஜா, பிரேம்நாத், ராஜேந்திரன், ஸ்ரீஹரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், 20 ஓட்டுகள் பெற்ற அனில்குமார், செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உதவி செயலாளராக சிவசுப்ரமணியன், பொருளாளராக சண்முகம், செயற்குழு உறுப்பினர்களாக சுந்தரராஜ், செல்வக்குமார், பிளசிங் செல்வக்குமார், சவுந்தரராஜன், அஜேஷ், வினோத், ராபின்சன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நிறைவில், தேர்தல் அதிகாரி ராஜ், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
வாக்குவாதத்தால் பரபரப்பு
கோவை மாவட்ட கால்பந்து நிர்வாகிகள் சங்க தேர்தல் தொடர்பாக, இரு தரப்பினரிடையே கோர்ட்டில் ஏற்கனவே வழக்குகள் இருந்தன. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு நியமிக்கப்பட்டது. இக்குழு, தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜ், தேர்தல் அதிகாரியாக கடந்தாண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று சங்க தேர்தல் நடந்தது. அப்போது, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.