/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட புத்தாக்க ஆய்வு விருது போட்டி
/
மாவட்ட புத்தாக்க ஆய்வு விருது போட்டி
ADDED : ஜன 25, 2024 06:31 AM
கோவை : மாவட்ட அளவிலான புத்தாக்க ஆய்வு விருது போட்டி, வரும் 29ம் தேதி, அவிநாசி ரோடு, மண்டல அறிவியல் மையத்தில் நடக்கிறது.
தேசிய அறிவியல் புத்தாக்க துறை மற்றும் தேசிய புத்தாக்க ஆய்வு நிறுவனத்துடன், மாநில பள்ளிக்கல்வித்துறை இணைந்து, பள்ளி மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணர, 2009 முதல், புத்தாக்க ஆய்வு விருது போட்டி நடத்தி வருகிறது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தங்களின் கண்டுபிடிப்பு குறித்து, கருத்துரு சமர்ப்பிக்கலாம்.
இதில் தேர்வு செய்யப்படும் படைப்புகள் செயல்வடிவமாக்க, 10 ஆயிரம் ரூபாய், மாணவர்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு பகிரப்படுகிறது. கடந்த கல்வியாண்டுக்கான, மாவட்ட அளவிலான புத்தாக்க ஆய்வு விருது போட்டி, அவிநாசிரோடு, மண்டல அறிவியல் மையத்தில், வரும் 29ம் தேதி நடக்கிறது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 122 மாணவர்கள் பங்கேற்பர்.
மாவட்ட அளவிலான சுற்றில் தகுதியான படைப்புகள், மாநில, தேசிய அளவிலான சுற்றுகளுக்கு தகுதி பெறும் என, மண்டல அறிவியல் அலுவலர் (பொறுப்பு) வள்ளி தெரிவித்தார்.