/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கராத்தே போட்டி; அன்னூர் மாணவர்கள் அசத்தல்
/
மாவட்ட கராத்தே போட்டி; அன்னூர் மாணவர்கள் அசத்தல்
மாவட்ட கராத்தே போட்டி; அன்னூர் மாணவர்கள் அசத்தல்
மாவட்ட கராத்தே போட்டி; அன்னூர் மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 17, 2025 05:08 AM

அன்னூர்: மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், அன்னூர் மாணவர்கள், 10 பேர் பதக்கம் வென்றனர்.
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, கோவையில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் அன்னூர் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பங்கேற்ற 10 மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர்.
சுவாதி தனிநபர் கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும், மோனிஷா, சரண் தனிநபர் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
தனிநபர் கட்டா பிரிவில், ரித்தன், சமுத்ரா, மைத்ரா, திவன்ஷிகா, கென்னிட், தாருகாசினி, தரணிஷ் ஆகியோர், வெண்கலப்பதக்கம் வென்றனர்.
சாதித்த மாணவ, மாணவியருக்கு பயிற்சி பள்ளி தலைவர் சந்திரசேகரன், பயிற்சியாளர் ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

