/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான 'பீச்' வாலிபால் போட்டி; 18 பள்ளி அணிகள் மாநில போட்டிக்கு தகுதி
/
மாவட்ட அளவிலான 'பீச்' வாலிபால் போட்டி; 18 பள்ளி அணிகள் மாநில போட்டிக்கு தகுதி
மாவட்ட அளவிலான 'பீச்' வாலிபால் போட்டி; 18 பள்ளி அணிகள் மாநில போட்டிக்கு தகுதி
மாவட்ட அளவிலான 'பீச்' வாலிபால் போட்டி; 18 பள்ளி அணிகள் மாநில போட்டிக்கு தகுதி
ADDED : ஜன 14, 2025 06:42 AM
கோவை; மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், கன்னியாகுமரியில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி, காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு, தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது, 18 அணிகள் பங்கேற்றன. 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி, டாக்டர் பி.ஜி.வி., பள்ளி, அகர்வால் மெட்ரிக் பள்ளி ஆகியன, முதல் மூன்று இடங்களை பிடித்தன.
தொடர்ந்து, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், எஸ்.வி.ஜி.வி., பள்ளி, சின்னத்தடாகம் அரசு பெண்கள் பள்ளி, பி.எஸ்.ஜி., கன்யா குருகுலம் பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அகர்வால் பள்ளி, ஏ.பி.சி., மெட்ரிக், புனித ஜோசப் பள்ளி ஆகியன, முதல் மூன்று இடங்களை பிடித்தன.
மாணவர்கள் பிரிவில்(14), சபர்பன் பள்ளி, வெள்ளியங்காடு அரசு உயர்நிலை பள்ளி, எஸ்.வி.ஜி.வி., பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் என்.ஜி.என்.ஜி., பள்ளி, ஏ.பி.சி., பள்ளி, அகர்வால் பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் என்.ஜி.என்.ஜி., பள்ளி, சபர்பன் பள்ளி, எஸ்.வி.ஜி.வி., பள்ளியும், முதல் மூன்று இடங்களை பிடித்தன.