ADDED : ஜன 07, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் 150 பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியை, பள்ளியின் நிறுவனத் தலைவர் பழனிச்சாமி, தாளாளர் தேன்மொழி ஆகியோர் துவக்கிவைத்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, நுணுக்கமான அறிவுத்திறனை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழல் கோப்பைகள், ரொக்கம், சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர். பரிசளிப்பு விழாவில், கோவை மாவட்ட செஸ் சங்கத்தின் தலைவர் விஜயராகவன் மற்றும் பள்ளியின் முதல்வர் நந்தினி பாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

