/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக்கில் மாவட்ட அளவில் செஸ் போட்டி
/
கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக்கில் மாவட்ட அளவில் செஸ் போட்டி
கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக்கில் மாவட்ட அளவில் செஸ் போட்டி
கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக்கில் மாவட்ட அளவில் செஸ் போட்டி
ADDED : மே 12, 2025 12:27 AM

போத்தனூர்; ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏ.பி.ஜெ., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
கல்லூரி அரங்கில் நேற்று நடந்த போட்டியை, கல்லூரி முதல்வர் ஆன்டனி பெர்னாண்டஸ் துவக்கி வைத்தார். ஸ்விஸ் சிஸ்டம் அடிப்படையில், எட்டு, 10, 12, 15 மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் என ஐந்து பிரிவுகளில், மாவட்டம் முழுவதுமிருந்து, 250 பேர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு வீரரும் ஆறு சுற்றுகள் விளையாட வேண்டும். ஒரு சுற்றுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல், 20 இடங்களை பிடித்தோருக்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு, பேரூர் செட்டிபாளையம் பஞ்., முன்னாள் தலைவர் சாந்தி, 12 வயது பிரிவினருக்கு உட்பட்ட பிரிவினருக்கு, ஏ.பி.ஜெ., ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் மதன்ராஜ், செயலாளர் வினோத், 15 மற்றும் 20 வயது பிரிவினருக்கு, செயலாளர் வினோத் ஆகியோர் பரிசு வழங்கினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவினருக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.