தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட அளவிலான செஸ் போட்டி: அசர வைத்த மாணவர்களின் 'செக்'

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: அசர வைத்த மாணவர்களின் 'செக்'

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: அசர வைத்த மாணவர்களின் 'செக்'


ADDED : மார் 12, 2024 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், மாணவர்கள் திறமையாக விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றனர்.

கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் தி யுனைடெட் பப்ளிக் பள்ளி சார்பில், 6ம் ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி, பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ - மாணவியருக்கு 9, 12, 15 மற்றும் 20 ஆகிய வயது பிரிவுகளில், போட்டிகள் நடந்தப்பட்டன.

வெற்றி பெற்றவர்கள்


ஒன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர்கள் பிரிவில், வேல் சர்வதேச பள்ளி மாணவர் யுவன் ஆகாஷ் முதலிடம், பிரில்லியன்ட் செஸ் அகாடமி இளந்திரியன் இரண்டாமிடம், வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஸ்டீபன் ஆண்ட்ரூஸ் மூன்றாமிடம்; மாணவியர் பிரிவில் அம்பாள் பப்ளிக் பள்ளி அத்விதா முதலிடம், பிரில்லியன்ட் செஸ் அகாடமி நேத்ரா இரண்டாமிடம், யுவபாரதி பள்ளி ரியா மூன்றாமிடம் பிடித்தனர்.

12 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில், வேலம்மாள் பள்ளி ஆத்விக் முதலிடம், எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளி ஜெரேம் அருள்ராஜ் இரண்டாமிடம், பிரணவ் தர்சன் மூன்றாமிடம்; மாணவியர் பிரிவில் ஸ்ரீநிதி முதலிடம், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி ஜெய்ஸ்னவி இரண்டாமிடம், பிரகன்யா மூன்றாமிடம் பிடித்தனர்.

15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி இறையன்பு முதலிடம், ரெட் செஸ் அகாடமி பிரணவ் இரண்டாமிடம், வித்யா நிகேதன் ராகுல் மூன்றாமிடம்; மாணவியர் பிரிவில், அரசு பள்ளி மாணவி கியூபா முதலிடம், செயின்ட் பிரான்சிஸ் பள்ளி அபிநயா இரண்டாமிடம், மெட்ரோ பள்ளி அதர்சனா மூன்றாமிடம் பிடித்தனர்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில், எஸ்.இ.எஸ்., பள்ளி ஆகாஷ் முதலிடம், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி நிர்மல் இரண்டாமிடம், பாரதிய வித்யா பவன் பள்ளி நந்திஸ் மூன்றாமிடம்; மாணவியர் பிரிவில் அக்சயா முதலிடம், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி தாராஸ்ரீ இரண்டாமிடம், எஸ்.டி.சி., கல்லுாரி ராமசுபரஞ்சனி மூன்றாமிடம் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், செஸ் டைமர், கோப்பை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us