/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான கால்பந்து கற்பகம் பல்கலை முதலிடம்
/
மாவட்ட அளவிலான கால்பந்து கற்பகம் பல்கலை முதலிடம்
ADDED : ஜன 08, 2024 01:37 AM

கோவை:அண்ணா பல்கலை சார்பில் நடந்த, மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், கற்பகம் பல்கலை அணி முதலிடம் பிடித்து அசத்தியது.
அண்ணா பல்கலை கோவை மண்டல வளாகத்தின் உடற்கல்வித்துறை சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான இன்விடேஷனல் ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப்போட்டியில், கற்பகம் பல்கலை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய கற்பகம் பல்கலை அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணா கல்லுாரியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.
சிறந்த வீரராக, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் கிஷோர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கோல் கீப்பராக, கே.சி.டி., மாணவர் ரித்விக் பிரணோ தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை, அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக டீன் சரவணகுமார், உடற்கல்வி இயக்குனர் சிவ சங்கர், உடற்கல்வி பயிற்றுனர் சரவணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.