ADDED : செப் 07, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; கோவை கே.என்.ஜி.புதூரில் உள்ள எம்.ஜி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடந்தது.
இங்குள்ள எம்.ஜி.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரத்தினபுரி கோ-கோ கிளப் ஆகியன இணைந்து, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான, 14 மற்றும், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோகோ போட்டியை நடத்தியது. இதில், மாவட்ட அளவில், 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். எம்.ஜி.எம்.பள்ளியின் துணைத் தலைவர் அனுப் ஈப்பன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். தாளாளர் ஷாஜி டேவிட், முதல்வர் ஷீலா ஆன்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.