தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி போட்டி

மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி போட்டி

மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி போட்டி


ADDED : ஜன 10, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:கோவை மாவட்ட கபடி சங்கம் மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி சார்பில், 20 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான மாவட்ட கபடி போட்டி நேற்று நடந்தது.

போட்டியை, கோவை மாவட்ட கபடி சங்க இணை செயலாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். 11 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்று நடந்த முதல் போட்டியில், சூலுார் பெஸ்ட் அண்ட் கோ மற்றும் சீலியூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அணிகள் மோதின.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பெஸ்ட் அண்ட் கோ அணி 22 - 8 என்ற புள்ளிகணக்கில் சீலியூர் அரசுபள்ளி அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இருந்து சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us