/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவில் இலக்கிய மன்ற போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் 570 பேர் பங்கேற்பு
/
மாவட்ட அளவில் இலக்கிய மன்ற போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் 570 பேர் பங்கேற்பு
மாவட்ட அளவில் இலக்கிய மன்ற போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் 570 பேர் பங்கேற்பு
மாவட்ட அளவில் இலக்கிய மன்ற போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் 570 பேர் பங்கேற்பு
ADDED : நவ 11, 2025 11:05 PM

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற மற்றும் வினாடி-வினா மன்றப் போட்டிகள் நடைபெறுகின்றன.
அதன்படி, 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி, கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதில் ஈரோடு, தர்மபுரி, தேனி உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இருந்து 375 மாணவிகள், 195 மாணவர்கள் என மொத்தம் 570 மாணவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும், நான்கு ஆசிரியர்கள் வீதம் 152 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை எழுதுதல், கதை கூறுதல், பேச்சுப் போட்டி, கவிதை எழுதுதல் ஆகியவை ஒரு பிரிவாகவும், வினாடி-வினா, தனிநபர் நடிப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை எழுதுதல் போன்றவை மற்றொரு பிரிவாகவும் நடைபெற்றன. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பிற மாவட்ட மாணவர்களுக்காக தங்கும் வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மாவட்ட கல்வி அதிகாரி கோமதி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
8ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி மதுரையிலும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி திருச்சியிலும் நடக்கவுள்ளது.
கோவையில் இருந்து ஒவ்வொரு வகுப்பிலும் தலா 20 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

