/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டேன்ஸ் பள்ளி நிறுவனர் தினவிழா கொண்டாட்டம்
/
ஸ்டேன்ஸ் பள்ளி நிறுவனர் தினவிழா கொண்டாட்டம்
ADDED : நவ 11, 2025 11:05 PM

கோவை: ஸ்டேன்ஸ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளியின், 163வது நிறுவனர் தின விழா, பள்ளியின் பெருமைமிக்க பாரம்பரியத்தை போற்றும் வகையில், விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி பல்கலையின் சர்வதேச உறவுகள் துறை டீன் பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் சில பத்தாண்டுகளிலேயே மறைந்துவிடும் நிலையில், ஸ்டேன்ஸ் பள்ளி 163 ஆண்டுகளைக் கடந்து, தனது ஸ்தாபக நோக்கத்தை நிலைநாட்டி, கம்பீரமாக நிற்கிறது என வாழ்த்தினார்.
பேராசிரியர் ஆனந்த் குமார், பிலிப் பவுலர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதன் பின், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் மற்றும் மாணவர் சந்திப்பு நடந்தது.
பள்ளிகளின் நிர்வாகக் குழு தலைவர் மெர்சி உம்மன், தாளாளர் பிலிப் பவுலர், பொருளாளர் ஜேம்ஸ் ஞானதாஸ், பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் சஜீவ் சுகு, முதல்வர் ஜான் ஸ்டீபன், துணை முதல்வர் திவாகரன் மற்றும் ஆளும் குழு உறுப்பினர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

