ADDED : நவ 11, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், இலவச ஆடுவளர்ப்பு பயிற்சி, 18ம் தேதி நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில், ஆடு ரகங்கள், வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை, தடுப்பூசி விபரங்கள், குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். பயிற்சி சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் பேசி, பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி காலை, 10:30 முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும்.
இத்தகவலை, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

