ADDED : ஏப் 17, 2025 11:45 PM

அ நிறம் | அளவு
கோவை; மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், 'ஓபன்' பிரிவில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில் வீரர் ஸ்ரீதர், 11-6, 11-8, 8-11, 14-12, 11-7 என்ற புள்ளிகளில் வீரர் சுஜித்தை வென்றார்.
இரண்டாம் அரையிறுதியில், வீரர் அபிஷேக், 11-4, 11-7, 11-6 என்ற புள்ளிகளில் வீரர் ராஜேந்திரனை வென்றார். பரபரப்பான இறுதிப்போட்டியில் வீரர் ஸ்ரீதர், அபிஷேக் ஆகியோர் மோதினர். இதில், 11-7, 9-11, 11-7, 5-11, 11-9 என்ற புள்ளிகளில் வீரர் ஸ்ரீதர் மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
