/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவில் குறள் பேச்சுப்போட்டி
/
மாவட்ட அளவில் குறள் பேச்சுப்போட்டி
ADDED : பிப் 17, 2024 11:59 PM
தொண்டாமுத்தூர்:பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.
சாந்தலிங்க பெருமான் குருபூஜை மற்றும் சத்வித்யா சன்மார்க்க சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்குறள் பேச்சுப்போட்டி நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார். 'திருவள்ளுவர் மனிதத்துக்கு வழங்குவது எளிமையே! வலிமையே!' என்ற தலைப்பில், பேச்சுப்போட்டி நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள, 26 கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். தொல்காப்பியர் பேரவை தலைவர் காளியப்பன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சின்னசாமி, பழனிசாமி நடுவர்களாக இருந்து, வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.