/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட்
/
மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட்
ADDED : மார் 30, 2025 11:10 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம், சூர்யா மருத்துவமனை, நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடந்தது.
மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், 14, 17 வயதுக்குட்பட்ட இந்த போட்டி, லீக் முறையில் நடந்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகளில், 16 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், மேட்டுப்பாளையம் வாரியர் அணியும், எஸ்.கே.சி., அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய எஸ்.கே.சி., அணி எட்டு ஓவர்களில், 120 ரன்களை எடுத்தன.
இரண்டாவதாக விளையாடிய வாரியர் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 53 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலிடத்தை மேட்டுப்பாளையம் எஸ்.கே.சி., அணியும், இரண்டாமிடத்தை மேட்டுப்பாளையம் வாரியர் அணியும் பெற்றன.
17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகளில், 15 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், மேட்டுப்பாளையம் ஹார்ட்ஸ் அணியும், மூக்கனூர் 11 அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய ஹார்ட்ஸ் அணி எட்டு ஓவர்களில், 52 ரன்களை எடுத்தன. இரண்டாவது விளையாடிய மூக்கனூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 29 ரன்கள் மட்டுமே எடுத்தன.
முதலிடம் பெற்ற எஸ்.கே.சி., அணியும், ஹார்ட்ஸ் அணியும், மாநில அளவில் நடைபெறும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.