/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அசத்தல்
/
மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அசத்தல்
மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அசத்தல்
மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அசத்தல்
ADDED : நவ 11, 2024 06:54 AM
பொள்ளாச்சி : சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடையே மாவட்ட அளவில் மாணவியர் கைப்பந்து போட்டி, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. இப்போட்டியானது, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.
மொத்தம், 17 பள்ளிகளைச்சேர்ந்த அணியினர் போட்டியில் பங்கேற்றனர். அதன்படி, 14 வயது பிரிவில், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி முதலிடம், உடுமலை நேஷனல் மாடல் பள்ளி இரண்டாமிடம், எஸ்.பி.ஐ.ஓ.ஏ., செகண்டரி பள்ளி மூன்றாமிடம் பிடித்தது. 17 வயது பிரிவில், பி.எஸ்.பி.பி., மில்லேனியம் பள்ளி முதலிடம், கிக்கானி வித்யா மந்திர் பள்ளி இரண்டாமிடம், சித்தர் ஞான பிரீத்தம் பள்ளி மூன்றாமிடம் பிடித்தது.
19 வயது பிரிவில், பி.எஸ்.பி.பி., மில்லேனியம் பள்ளி முதலிடம், நேஷனல் மாடல் பள்ளி இரண்டாமிடம், ஏ.ஆர்.பி., இண்டர்நேஷனல் பள்ளி மூன்றாமிடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவில், ஏ.ஆர்.பி., பள்ளி முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.
பள்ளித்தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் சத்யவதி நன்றி கூறினார்.