/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
/
மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
ADDED : ஜூலை 10, 2025 10:19 PM

பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்தன.
இப்போட்டியில் கோவை மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன.
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து, 57 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் லீக் முறையில் நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற எஸ்.வி.ஜி.வி., அணி மற்றும் ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிகளுக்கு இடையில் நடந்த இறுதிப் போட்டியில், 25--21, 25--18 என்ற புள்ளிகள் கணக்கில், எஸ்.வி.ஜி.வி., அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் அன்னை வயலட் பள்ளி அணி மற்றும் இருகூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில், 25--8, 25--14 புள்ளிகள் கணக்கில் அன்னை வயலட் அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட விளையாட்டு துறை ஆய்வாளர் குமரேசன் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.