தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எழுத்தாளர் பூவண்ணன் காலமானார்

எழுத்தாளர் பூவண்ணன் காலமானார்

எழுத்தாளர் பூவண்ணன் காலமானார்


ADDED : ஜன 13, 2013 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2013 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:சிறந்த குழந்தை இலக்கிய நூல்களை எழுதியதற்காக ஜனாதிபதி விருது பெற்ற எழுத்தாளர் பூவண்ணன், 81.

நேற்று முன் தினம் சாயிபாபா காலனியில் உள்ள ஆவரது வீட்டில் காலமானர்.பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். சென்னை வைணவக் கல்லூரி மற்றும் பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் படைப்பிலக்கிய சூழலில் குறிப்பாக குழந்தை இலக்கியம் படைப்பதில் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கியவர். நாவல், சிறுகதை, நாடகம்,கவிதை கட்டுரைகள் என, 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'சிறுவர் இலக்கியக் களஞ்சியம்' என்ற தலைப்பில், 5,000 பக்கங்களில் 15 தொகுதிகளை வெளியிட்ட ஒரே இந்திய எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு. சிறந்த குழந்தை இலக்கியம் நூல்களை எழுதியதற்காக ஜனாதிபதி விருதும், 'நம் குழந்தைகள்' மற்றும் 'அன்பின் அலைகள்' ஆகிய திரைப்படங்ளின் கதையை எழுதியதற்காக தமிழக அரசின் 'சிறந்த கதாசிரியர்' விருதை பெற்றுள்ளார்.தமிழகத்தில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இவருக்கு குழந்தை இலக்கிய மாமணி, பாலர் இலக்கிய ஜோதி, இலக்கிய செம்மல் மற்றும் செந்தமிழ் சிற்பி உள்ளிட்ட பல பட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளனர். காலமான பூவண்ணனுக்கு மனைவி, மகன் மற்றும் இருமகள்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us