/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட 'டேக்வாண்டோ' மாரண்ண கவுடர் பள்ளி முதலிடம்
/
மாவட்ட 'டேக்வாண்டோ' மாரண்ண கவுடர் பள்ளி முதலிடம்
ADDED : நவ 03, 2024 11:06 PM

கோவை; மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டில் மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.
பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டு போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடந்த போட்டியில் மாரண்ண கவுடர் பள்ளி, 11 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. முதலிடம் பிடித்து தங்கம் வென்ற மாணவர்கள், ராகுல், லோகநாத் சக்ரவர்த்தி, இளவேந்தன், தனுஷ்குமரன், மஹிலால், ஷாலினி, ஷ்ராவணி, காவ்யா, ரித்திகா ரோகயா, தாரணிஸ்ரீ ஆகியோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி முதல்வர் சுரேஷ்கனி, டேக்வாண்டோ ஆசிரியர் சிஜூகுமார், உடற்கல்வி ஆசிரியை ஸ்வேதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.