UPDATED : ஆக 27, 2026 06:33 PM
ADDED : ஆக 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 19 வயது பெண், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவர் கல்லுாரிக்கு செல்லும் போது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவீந்திரன், 39, பின்தொடர்ந்து சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு, அடிக்கடி தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் இதுகுறித்து வற்புறுத்தி உள்ளார். மாணவி மறுக்கவே, அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாணவி அளித்த புகாரில், மேட்டுப்பாளையம் போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர்.
