/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளுக்கு இடையூறு; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
/
வனவிலங்குகளுக்கு இடையூறு; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வனவிலங்குகளுக்கு இடையூறு; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வனவிலங்குகளுக்கு இடையூறு; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ADDED : செப் 20, 2024 10:07 PM
வால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உலா வரும் வனவிலங்குகளை, சுற்றுலா பயணியர் தொந்தரவு செய்யக்கூடாது என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில் குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். மலைப்பாதையில், வரையாடு, குரங்குகள், சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உலா வருகின்றன. கொண்டை ஊசி வளைவுகளிடையே சாலையோரம் நடமாடும் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணியர் உணவு பொருட்களை வழங்குகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் இருந்து, அட்டகட்டி வழியாக, பொள்ளாச்சி ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களில் பயணிக்கின்றனர். மலைப்பாதையில் செல்லும் போது, சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளுக்கு உணவு வழங்குகின்றனர்.
குறிப்பாக, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் சுற்றுலா பயணியர் வழங்கும் உணவுக்காக ரோட்டில் நடமாடும் குரங்குகள், வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. அவற்றின் உணவு தேடும் இயல்பு குணமே மாறி வருகிறது.
எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை சுற்றுலா பயணியர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.