/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கலக்கிய' பள்ளி மாணவ, மாணவியர்
/
'கலக்கிய' பள்ளி மாணவ, மாணவியர்
ADDED : டிச 01, 2024 11:09 PM

தொண்டாமுத்தூர்; வெள்ளிமலைப்பட்டினத்தில் உள்ள, கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் அசத்தியுள்ளார்.
கோவை கலைமகள் கலை மற்றும் மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் விளையாட்டு குழு சார்பில், மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
மாணவர்களுக்கு, வாலிபால் மற்றும் கால்பந்து போட்டிகளும், மாணவிகளுக்கு, த்ரோபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், 150-க் கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான வாலிபால் இறுதிப்போட்டியில், கிரசென்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியும், தேவராயபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியும் மோதின.
இதில், 50:30 என்ற புள்ளிக்கணக்கில், கிரசென்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வெற்றி பெற்றது. கால்பந்து போட்டியில், 5:1 என்ற கோல் கணக்கில், எஸ்.என்.மெட்ரிக்குலேஷன் பள்ளியை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வென்றது.மாணவிகளுக்கான கூடை பந்து போட்டியில், 35:23 என்ற புள்ளி கணக்கில், சி.சி.எம்.ஏ., மேல்நிலைப் பள்ளியை, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி வென்றது.
த்ரோபால் போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளியை, 30:12 என்ற புள்ளி கணக்கில் பிரசன்டேஷன் பள்ளி மாணவிகள் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லூரி முதல்வர் மாலா, கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.