/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் மைதானம் அமைக்க அழைப்பு விடுக்கிறது 'டிட்கோ'
/
கிரிக்கெட் மைதானம் அமைக்க அழைப்பு விடுக்கிறது 'டிட்கோ'
கிரிக்கெட் மைதானம் அமைக்க அழைப்பு விடுக்கிறது 'டிட்கோ'
கிரிக்கெட் மைதானம் அமைக்க அழைப்பு விடுக்கிறது 'டிட்கோ'
ADDED : நவ 01, 2025 05:25 AM
கோவை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு, விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, டிட்கோ அழைப்பு விடுத்துள்ளது.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என, கடந்த லோக்சபா தேர்தலின்போது தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதை நிறைவேற்றும் விதமாக, ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை வளாகத்தில், 20.72 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு கிரிக்கெட் விளையாட்டுத் திடல் அமைக்க, விமான நிலைய ஆணையமும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், தனியார் பொது பங்களிப்பு வாயிலாக, மைதான வடிவமைப்பு, கருதுகோள் திட்டம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை (இ.ஓ.ஐ.,) கோரியுள்ளது.
வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான முன் ஏல கலந்தாய்வு கூட்டம், வரும் 13ம் தேதி நடக்கிறது.

