/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி விருது
/
கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி விருது
கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி விருது
கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி விருது
ADDED : மார் 04, 2024 12:51 AM

கோவை:கே.ஜி., கல்வி குழுமத்தின் சார்பில், சிறந்த,10 பெண் சாதனையாளர்களுக்கு, திவ்யலட்சுமி விருது வழங்கப்பட்டது.
கே.ஜி., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமியை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டுக்கான கே.ஜி., குழுமத்தின் திவ்யலட்சுமி விருது வழங்கும் விழா, சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்., வளாகத்தில் நடந்தது.
இதில், ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் முன்னாள் இயக்குனர் ஜெனரல் டாக்டர் டெஸ்ஸி தாமஸ், இந்தியாவின் முதல் பெண் மரைன் பைலட் ரேஷ்மா நிலோபர் விசாலாட்சி, ஆட்கடத்தலை தடுத்த திரிவேணி ஆச்சார்யா, சரணாலயம் நிறுவனர் வனிதா ரங்கராஜ், சாஹாஸ் நிறுவனர் தவுலத் பீ கான், இணையும் கைகள் நிறுவனர் ஆட்டோ டிரைவர் ராஜிஅசோக், பெண் பாடி பில்டர் சங்கீதா, மராத்தான் வீராங்கனை வசந்தி ஆனந்தன், அப்துல் கலாம் கனவு பள்ளி நிறுவனர் ஜெயபிரபா மற்றும் கரோலினா கோஸ்ஷாமி ஆகிய பெண் சாதனையாளர்களுக்கு, கே.ஜி., குழுமத்தின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
அறக்கட்டளையின் சார்பில், திவ்யலட்சுமி கல்வி உதவித்தொகை, 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் அரவிந்த் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

