/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில் தீபாவளி கண்காட்சி, விற்பனை
/
சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில் தீபாவளி கண்காட்சி, விற்பனை
சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில் தீபாவளி கண்காட்சி, விற்பனை
சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில் தீபாவளி கண்காட்சி, விற்பனை
ADDED : அக் 10, 2025 10:43 PM
ச ர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், இன்று முதல் வரும் 13ம் தேதி வரை, தீபாவளி கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
உள்ளூர் மக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கத்தில், அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரி வளாகத்தில், இன்று முதல் வரும் 13ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, காலை 11 முதல் இரவு 8 மணி வரை காணலாம்.
இக்கண்காட்சி, பாரம்பரிய கைவினை மற்றும் உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தரமான தளம் ஆகும். பார்வையாளர்கள் தீபாவளியின் பண்டிகை உற்சாகத்தை அனுபவித்து, தனித்துவமான தயாரிப்புகளை நேரடியாக பார்க்கவும், வாங்கவும் வாய்ப்பு பெறுவர்.
இதில், முக்கிய பண்டிகை தயாரிப்புகள், பண்டிகை கொண்டாட்டங்களுக்கு சிறந்த அணிகலன்கள், நவநாகரிக மற்றும் பண்டிகை உடைகள், பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கைத்தறி புடவைகள், சோப்புகள் மற்றும் அழகு சாதன பொருட்கள், பிரீமியர் ஜவுளி மற்றும் துணிகள், பேஷன், அலங்காரப் பொருட்கள், தனித்துவமான பரிசுப்பொருட்கள் இடம்பெறுகின்றன.
மாணவர்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு, சிறந்த ஒரு வணிக தளத்தை இக்கண்காட்சி ஏற்படுத்தித்தரும் என, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.