sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீபாவளிக்கு இப்போ இந்த டிரெஸ்தான் டிரெண்ட்

/

தீபாவளிக்கு இப்போ இந்த டிரெஸ்தான் டிரெண்ட்

தீபாவளிக்கு இப்போ இந்த டிரெஸ்தான் டிரெண்ட்

தீபாவளிக்கு இப்போ இந்த டிரெஸ்தான் டிரெண்ட்


ADDED : அக் 10, 2025 10:43 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளியை முன்னிட்டு, கடைகளில் ஆடை கலெக்சன்கள் நிரம்பி வருகிறது. எக்கச்சக்கமாய் கொட்டிக்கிடக்கும் ஆடைகளில் எதை எடுப்பது என குழப்பமாக இருக்கும். டிரெண்டிங்கிற்கேற்ப ஆடைகளை செலக்ட் செய்பவரா நீஙகள்? அப்போ, தீபாவளி ஷாப்பிங்கிற்கு முன்பு, நடப்பாண்டு பெண்களுக்கான பேஷன் டிரெண்டுகளை தெரிந்துகொள்ளுங்கள். சஹாரா ஆடைகள் பஞ்சாப் , வட இந்தியாவில் 80களில் டிரெண்டாக இருந்த சஹாரா தற்போது மீண்டும் பெண்களில் பிடித்த ஆடையாக மாறியுள்ளது.சஹாரா ஆடைகளில் புதிய மாடல்கள் இந்த தீபாவளிக்கு அணிவகுத்துள்ளது. ஒரு வயது முதலே பெண் குழந்தைளுக்கு சஹாரா ஆடைகள் கிடைக்கிறது. ஷார்ட் டாப் மற்றும் தொளதொள பேண்ட் மாடல் வரும். கவரும் வண்ணம் மற்றும் மஞ்சள், ரோஸ், பச்சை அடர் வண்ணங்கள் இந்த ஆடைகளுக்கு போல்ட் லுக்கை தருகிறது.

லாங் கவுன் அணிவதற்கும், கையாள்வதற்கும் சவுகரியமாக இருப்பதால் பெரும்பாலான பெண்களின் விருப்ப தேர்வாக லாங் கவுன் உள்ளது. விதவிதமான டிசைன்களில், வண்ணங் களில் லாங் கவுன் மாடல்களை டிசைனர்கள் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றனர். எந்த விழாவுக்கும் ஏற்ப லாங் கவுன் மாடல் கிடைக்கும்.

அனார்க்கலி ஒவ்வொரு தீபாவளியிலும் புதிய அனார்க்கலி கவுன் டிரெண்ட்ஸ் வந்துகொண்டே உள்ளது. பாரம்பரிய லுக்கிற்கு ஏற்றதாக இது உள்ளது. தீபாவளி போன்ற மின்னும் விழாவிற்கு ஏற்ற ஆடையாக இருக்கும். இதிலும் பல வகை வண்ணங்களில் டாப், ஷால் மற்றும் பாட்டம் வருகிறது. இந்த தீபாவளிக்கு சிறந்த ஆடை.

ஒவ்வொரு தீபாவளியிலும் புதிய அனார்க்கலி கவுன் டிரெண்ட்ஸ் வந்துகொண்டே உள்ளது.

மார்டன் டிவிஸ்ட் லெகங்கா இந்த தீபாவளியில், டாப் டிரெண்டிங்கில் உள்ள ஆடையாக, டிரெடிசனல் வித் மார்டன் டிவிஸ்ட் லெகங்கா உள்ளது. ராயல் புளூ, எமரால்டு கிரீன், பிரைட் மஸ்டர்ட் மஞ்சள் ஆகிய போல்டு ஜூவல்லரி டோன்களை தேர்ந்தெடுக்கலாம். எம்பிராய்டரி, ஸ்டோன் வொர்க்ஸ் லெகங்காக்கள், தீபாவளிக்கு சரியான பியூசன் ஆடையாக இது இருக்கும்.

ரெடிமேட் சாரீஸ் சேலை கட்ட பிடிக்கும், ஆனா கட்ட தெரியாது எனும் இன்றைய பெண்களுக்காவே தற்போது ரெடிமேட் சாரீஸ் டிரெண்டிங்கில் உள்ளது. இது சாதாரண புடவை போல் அல்லாமல் சற்று இண்டோ வெஸ்டர்ன் லுக்கில் வரும். ஸ்டைலாக இருக்க வேண்டியும் அதேசமயம் பாரம்பரிய உடையாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த ஆடையாகும்.

ஜம்சூட் பெரிய வேலைப்பாடு வேண்டாம், ஆனால் தனித்துவமாக இருக்க வேண்டுமா? ஜம்சூட் டிரை செய்து பாருங்கள். இதுவும், இன்டோ வெஸ்ட்ன் பாணியை கொண்டது. ஜேக்கட் ஸ்டைல் ஜம்சூட்கள் தற்போதைய டிரெண்டாக உள்ளது. ஒரே வண்ணங்களில் அணிவது இப்போது அனைவராலும் விரும்பப் படுகிறது.






      Dinamalar
      Follow us