/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆஸ்துமா நோயாளிகள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி ?
/
ஆஸ்துமா நோயாளிகள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி ?
ஆஸ்துமா நோயாளிகள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி ?
ஆஸ்துமா நோயாளிகள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி ?
ADDED : அக் 10, 2025 10:42 PM
ஆ ஸ்துமா நோயாளிகள், சுவாசநோய் பாதிப்பு உள்ளவர்கள் எப்படி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடலாம் என பார்க்கலாம்...
l அதிகளவில் பட்டாசுகளை வெடிக்கும் போது பட்டாசு புகை வீட்டிற்குள் வராதபடி கதவு, ஜன்னல்களை மூடி வைக்கவும்.
l வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், என் 95 மற்றும் பல அடுக்கு முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
l போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சுவாச மண்டலத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.
l அதிகப்படியான கொழுப்பு மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி, ஆஸ்துமாவை மோசமாக்கும்.
l தீபாவளி நேரங்களில் முடிந்தவரை மிதமான மற்றும் சோர்வு இல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். தீபாவளிக்கு பிறகு உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்.