/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி போனசை என்ன பண்ண போறீங்க!
/
தீபாவளி போனசை என்ன பண்ண போறீங்க!
ADDED : அக் 10, 2025 10:42 PM
இ ந்தியாவின் மிகப் பெரும் பண்டிகையாம் தீபாவளியை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, பணியாளர்கள் தங்கள் போனசிற்காக காத்திருக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த பணத்தில், நிறைய பிளான் வெச்சிருப்போம். உங்களின் ஒராண்டு உழைப்பிற்காக கிடைத்த இந்த பணத்தை, வேண்டாத பொருட்களை வாங்கி குவிக்காமல், ஸ்மார்டாக பயன்படுத்த வேண்டும்.
l தீபாவளி போனசை நீண்ட காலம் செலுத்த முடியாத கடன்களுக்கு பயன்படுத்தலாம். தனிப்பட்ட கடன் அல்லது கிரெடிட் கடன்களை செலுத்துவதற்கு பயன்படுத்தலாம். நீண்ட கால கடன்களால் வட்டி சுமையும் அதிகரிக்கும். முக்கியமாக, பாதுகாப்பற்ற மற்றும் அதிக வட்டி கொண்ட கிரெடிட் கார்டு கடன்களை செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
l உங்கள் தீபாவளி போனசை நீண்ட கால முதலீட்டிற்கு பயன்படுத்துவது நல்ல யோசனை. நீண்ட கால முதலீடுகள் எப்போதும் உங்களுக்கு அதிக வருமானத்தை அளிக்கும். கனவு வீடு, குழந்தைகளின் கல்லுாரி மற்றும் திருமண செலவு, ஓய்வு ஆகியவற்றிற்கு பயன்படும் வகையில் இந்த முதலீடு அமைய வேண்டும். தங்கம் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் போன்றவை தரும் ஆதாயம் உங்கள் போனசை, பம்பர் போனசாக மாற்றும்.
l வாழ்க்கையில் எதிர்பார்க்காத ஒன்று எப்போதும் இருக்கும். நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. வேலையிழப்பு, மருத்துவம் போன்ற எதிர்பாரா சூழலை சமாளிக்க, அவசர கால நிதியை எப்போதும் வைத்திருக்க வேண்டும். எமர்ஜென்சி கால நிதியில், மூன்று முதல் ஆறு மாதச் செலவுகளுக்குப் ஏற்ற பணத்தை ஒதுக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர் .
l தீபாவளி போனசில் எதிர்கால பாதுகாப்பிற்காக நீங்கள் செலவு செய்ய விரும்பினால், காப்பீட்டில் முதலீடு செய்வது சிறந்தது. விபத்து, இறப்பு போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் போது நிதி பாதுகாப்பை வழங்குவதால் காப்பீடு செய்வது மிகவும் முக்கியம். சிறந்த காப்பீட்டை பெறுவது, உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கு சிறந்த பாதுகாப்பது மட்டுமல்லாமல், வரி திட்டமிடலுக்கும் உதவும்.
l பட்ஜெட் நெருக்கடியால் நீண்ட காலமாக வாங்க முடியாமல் போன பொருளை இந்த போனஸ் மூலம் வாங்கலாம். இந்த தீபாவளி சமயங்களில் பல முன்னணி பிராண்டுகளும், தங்களது பொருட்களுக்கு அதிகபட்ச தள்ளுபடிகளை அளிக்கின்றன. இதனால், அதிக பணத்தை சேமிப்பதும் சிறந்த யுக்திதான்.